logo
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

11/Jun/2021 05:37:26

ஈரோடு, ஜூன்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள தலைநகரங்கள், அந்தந்த மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று  காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் .பி.ரவி தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஷ்ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாசலம், ஈஸ்வரமூர்த்தி

மண்டலத் தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக், அம்புலி, விஜயபாஸ்கர், மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணப்பன், இளைஞர் காங்கிரஸ் விஜய் கண்ணா, சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாட்ஷா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நசியனூர், காளிங்கராயன் பாளையம் உட்பட பல்வேறு பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Top