logo
புதுக்கோட்டை  மாவட்ட  ஆட்சியரகத்தில் 153 பயனாளிகளுக்கு ரூ.78.41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 153 பயனாளிகளுக்கு ரூ.78.41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

09/Nov/2020 10:31:03

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பி. உமாமகேஸ்லரி தலைமையில்,   தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர்  பி.கே.வைரமுத்து முன்னிலையில்  நடந்த விழாவில்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா; டாக்டா;.சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு   அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதையடுத்து  செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:வளா;ந்த நாடுகள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பண்டிகை காலம் தொடங்கும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாது பின்பற்ற வேண்டும். 

ஏற்கனவே அறிவுறுத்தியபடி நெரிசல் மிகுந்த இடங்களுக்கு வயதானவர்கள் மற்றம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். தீபாவளியை பொது மக்கள் அனைவரும் நோய் பாதுகாப்பு சுயகட்டுப்பாட்டுடன் கூடிய தீபாவளியாக கொண்டாட வேண்டும். 


தமிழக அரசின்  முயற்சியால் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் பயில 7.5 சதவீதம்  உள்ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 3-ஆம் தேதி முதல் இதுவரை 27,400 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. 16 -ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின் ஓரிரு நாட்களில் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் மக்கள் நல்வாழவுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்..

பின்னா; மக்கள் நல்வாழவுத்துறை அமைச்சர்  ஆட்சியரகத்தில் வருவாய் துறையின் சாh;பில் 148 பயனாளிகளுக்கு ரூ.70.41 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 64-ஆவது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய விளையாட்டு போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற 5 விளையாட்டு  வீரர்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் ஊக்கத் தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கந்தா;வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் த.ஜெயலெட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலா; அந்தோணி அதிஷ்டராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Top