logo
நண்பர்களுடன் இணைந்து 500 பேருக்கு தினசரி மதிய உணவு  வழங்கும் புதுகை நகர உதவி காவல் ஆய்வாளர்...!

நண்பர்களுடன் இணைந்து 500 பேருக்கு தினசரி மதிய உணவு வழங்கும் புதுகை நகர உதவி காவல் ஆய்வாளர்...!

24/May/2021 08:35:52

புதுக்கோட்டை, மே: நண்பர்களுடன் இணைந்து 500 பேருக்கு தினசரி மதிய உணவு  வழங்கி வருகிறார் புதுகை நகர உதவி காவல் ஆய்வாளர் அன்பழகன்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் வருகை அதிகரித்து வருவதால் மருத்துவத்துறையில் பணியாற்றக்கூடிய அனைவரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அவர்களின் தவிப்பு  ஓராண்டைக்கடந்து விட்டது.

கொரோனாவுடன் போராடி வரும் அத்தகைய துறையில் பணியாற்ற கூடியவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் இன்று வரை போராடிக் கொண்டிருக்கின்றனர். கொரோனா பெரும் தொற்று இல்லாத நாடாக இருக்கவேண்டும் என்பதற்காக போராடி வருகின்றனர்.

இவர்கள்  சரியான நேரத்துக்கு  உணவு சாப்பிடுகின்றனரா என்பதே கேள்வி க்குறி.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வா ளர் அன்பழகன் தனது சக நண்பர்களுடன் இணைந்து நாள்தோறும் 500 பணியாளர்களுக்கு உணவு அளித்து வருகிறார்..

கடந்த 17-ஆம்  தேதி  புதுகை குமரன் ஸ்டோர் உரிமையாளர் குமார்  உள்ளிட்ட  சில நண்பர் மற்றும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக விற்பனை நிலையத்தின் உதவியுடன்  மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் இலவசமாக மதியம் 500 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். 

 பெருந்தொற்று காலத்தில்  மக்களுக்கு அயராது மருத்துவ பணியை செய்து வரும் மருத்து வமனை பணியாளர்களுக்கு உணவளிக்கும் மனித நேயத்தை சமூக ஆர்வலர்கள் பாராட் டுத்தெரிவித்தனர்.

 

Top