logo
 புதுக்கோட்டை.யில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு

புதுக்கோட்டை.யில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு

02/Nov/2020 10:03:44

புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவ சிலையை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் இன்று (2.11.2020)  திறந்து வைத்தார்.

விழாவில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ. மெய்யநாதன், திராவிட முன்னேற்றக் கழக சொத்து குழு பாதுகாப்பு உறுப்பினர் அஞ்சுகா மீனாட்சிசுந்தரம்,.

புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் ஆ செந்தில் கந்தர்வகோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரா.சு.கவிதைப்பித்தன், புதுக்கோட்டை நகர கழக செயலாளர் க. நைனா முகமது, மாவட்ட அமைப்பாளர் எம்.எம். பாலு மற்றும் விழாவில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் நகர வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர் 


Top