logo
பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

21/Jan/2021 01:38:20

புதுக்கோட்டை, ஜன: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  வட்டாட்சியரிடம் மனுக் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், விவசாயிகளின் கடன் முழுவதையும் ரத்துசெய்ய வேண்டும். நிலக்கடலை, பயறு, உளுந்து, பூ போன்ற பாதிக்கப்பட்ட அனைத்து சாகுபடிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். கணக்கெடுப்பை விடுபடாமல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.நாராயணசாமி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் மற்றும் இளையராஜா, சித்திரைவேல், மணி, புன்னியமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

கறம்பக்குடியில் ஒன்றியத் தலைவர் எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் த.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கீரனூரில் வி.ச.ஒன்றியத் தலைவர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பீமராஜ் சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றயிச் செயலாளர் கே.தங்கவேல், விச ஒன்றியச் செயலாளர் கே.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல அன்னவாசல், திருமயம் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Top