17/Oct/2020 04:41:35
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாமின் 89-ஆவது பிறந்த நாளையொட்டி தொட்டியம்பட்டி ஊராட்சித் தலைவர் கீதா சோலையப்பன் தலைமையில் உதவும் இதயங்கள் அறக்கட்டளை நிறுவநர் மற்றும் தலைவர் ரோகிணி விஜயகுமார் முன்னிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணியாளர்களுக்கு உதவும் இதயங்கள் அறக்கட்டளை இயக்குநர் தேவிகா மரக்கன்றுகளை வழங்கினார்.
இதில், தொட்டியம்பட்டி ஊராட்சித் துணைத் தலைவர் சாமிநாதன், வார்டு உறுப்பினர் கணேசன், ஊராட்சி செயலர் செல்வம், உதவும் இதயங்கள் அறக்கட்டளை துணைச் செயலாளர் கண்ணன் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்து மரக்கன்றுகளை வழங்கினர்.