logo

11-ஆம் வகுப்பு மாணவி ஸ்கூட்டருடன் மாயம்

02/Nov/2020 10:00:24

ஈரோடு முனிசிபல் காலனி வைகை வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(43). எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர். இவருக்கு மனைவி காயத்திரி, மகன் அரவிந்த்(19) , மகள் சந்தியா(16)  ஆகியோர்  உள்ளனர். சந்தியா ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சந்தியா நேற்று முன்தினம் காலை ஸ்கூட்டரில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் இதுவரை கிடைக்கவில்லை. இதுகுறித்து சண்முகசுந்தரம் ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடி வருகின்றனர்.


Top