logo
காவிரி குண்டாறு  இணைப்புத்திட்டத்துக்கு  தாமாக முன்வந்து நிலங்களை அளித்துவரும் விவசாயிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

காவிரி குண்டாறு இணைப்புத்திட்டத்துக்கு தாமாக முன்வந்து நிலங்களை அளித்துவரும் விவசாயிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

18/Nov/2020 11:51:47

புதுக்கோட்டை: காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு, புதுக்கோட்டை விவசாயிகள் 50 சதவீதம்  பேர் தாமாக முன்வந்து இடத்தை வழங்க ஒப்புதல் தந்திருப்பதாக சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்யோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் அவர் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தின் நீண்ட காலக் கோரிக்கையான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தனி மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 50 சதவிகித விவசாயிகள் தங்கள் இடத்தை வழங்க முன்வந்துள்ளனர்.

அவர்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்குவதது மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. கொரோனா பரவல் தற்போது மிகா குறைந்துள்ளது என்றாலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலம், குளிர்காலமான பருவமழைக் காலம் ஆகும்.

இது போன்ற காரணிகளால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றார் அவர். இதில், ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, மாநில வீட்டு வச ரியத் தலைவர் பி.கே. வைரமுத்து மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Top