logo
போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் புதுக்கோட்டை நகரம்.. ஊர்ந்து செல்லும் உயிர்காக்கும்  108 வாகனம் .!.

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் புதுக்கோட்டை நகரம்.. ஊர்ந்து செல்லும் உயிர்காக்கும் 108 வாகனம் .!.

30/Oct/2020 12:09:20

புதுக்கோட்டை நகரில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருப்பதை தற்போது பார்க்க முடிகிறது. காரணம் அதன் பழைய வடிவம் மாறிப்போனதுதான். புதுக்கோட்டை நகரம் தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் திவான் சேஷய்யா சாஸ்திரியால் அழகாக திட்டமிட்டநிர்மாணிக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்றும் அதற்குள் நான்கு வீதிகள் என்றும் நிர்மானிக்கப்பட்டது. அகலமான வீதிகள் இதன் பிரதான அம்சம். காலப்போக்கில் வீதிகளின் அகலம் சுறுங்கிப் போய்விட்டது.

 மேலும், மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் பெருக்கம் , வாகனங்களை ஒழுங்காக நிறுத்தாதது போன்றவைகள் போக்குவரத்தை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டது. புதைசாக்கடைத் திட்டத்திற்கு வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் வாகனங்கள் விரைவாக செல்லமுடியாமலும், பல இடங்களில் விபத்தையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீதியிலும் பள்ளங்கள் உள்ளது. 

தற்சமயம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி உள்ள வீதிகள் கீழராஜவீதி, கீழ இரண்டு,.வடக்கு மற்றும் மேலராஜவீதி.  நெருக்கடி யை உண்டாக்கும் இடங்களாக மாறிவிட்டது. மேலராஜ வீதி சாலை வழக்கத்தை விட  உயரமாக உள்ளது.  கரணம் தப்பினால் மரணம்தான்.போக்குவரத்து நெருக்கடி இல்லாத நேரமே கிடையாது.      வடக்குராஜவீதிவழியாக மருத்துவக்கல்லூரிக்கு அவ்வப்போதுநோயாளிகளை அவசரசிகிச்சை க்காக கொண்டு செல்லும்  உயிர்காக்கும்  108 ஆம்புலன்ஸ்  வாகனம் போக்குவரத்து நெரிசலால் சிரமத்துடன் ஊர்ந்து செல்கிறது.   இரவு நேரத்தில் தள்ளுவண்டியில் உள்ள துரித உணவகங்கள் சாலை ஓரத்தை ஆக்கிரமிப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.


எனவே, மாவட்டநிர்வாகத்தினர்  போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு மக்களை விபத்திலிருந்து காக்க வேண்டுகிறோம். முதலாவது இருசக்கர வாகனங்களை அதன் எல்லைக்குள் நிறுத்த ஆவன செய்யவேண்டும். சாலையோரங்களில் செயல்படும் வாகன பழுதுபார்க்கும் கடைகளை கடைக்குள்ளேயே பழுது பார்க்க ஆவன செய்ய வேண்டும். அடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இரவு நேரங்களில் சாலையொட்டி போடப்பட்டிருக்கும் துரித உணவகங்களை ஒழுங்கு செய்ய வேண்டும். புதை சாக்கடை இணைப்புக்காக  தோண்டப்பட பள்ளங்களை மூட வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.    


Top