logo
மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஒப்புதல் சிஐடியு போராட்டம் ஒத்திவைப்பு

மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஒப்புதல் சிஐடியு போராட்டம் ஒத்திவைப்பு

28/Oct/2020 02:48:44

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை மாவட்ட அட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

 இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள தகவல்: லாரிகளில் ஏற்றுமதி செய்வோர் பெரும்பாலும் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்க ளுக்குமே கொண்டு செல்லப்படுகிறது. மாட்டுவண்டிகளில் அள்ளப்படும் மணல் அனைத்தும் மாவட்டத்திற்குள் அந்தந்தப் பகுதிகளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

தற்பொழுது மாவட்டத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் லாரிகளில் ஏற்றி கொள்ளை லாபம் ஈட்டும் மணல் மாஃபியாக்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மாட்டுவண்டிகளில் மணல் எடுக்கும் ஏழைத் தொழிலாளர்களை அதிகாரிகளால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

கல்குவாரிகளை கைவசயம் வைத்துள்ள அரசியல் பலமும், அதிகார பலமும் உள்ளவர்கள் எம்.சாண்ட் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கிலேயே மணல் குவாரிக்கான அனுமதி மறுக்கப்படுகிறது. 

எனவே, மாவட்டத்தில் கறம்பக்குடி அக்னியாறு, ஆவுடையார்கேரிவல் வெள்ளாறு, குடுமியான்மலை பாம்பாறு, மழையூர் அக்னியாறு, அரிமழம் வெள்ளாறு, கடையக்குடி வெள்ளாறு, விராலிமலை கோரையாறு, அறந்தாங்கி பெருநாவ;ர் உள்ளிட்ட 9 இடங்களில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க வலியறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி சிஐடியு நிவாகிகளை பேச்சுவார்;தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில் புதுக்கோட்டை வட்டாட்சியர் முருகப்பன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஸ்ரீதர், கே.முகமதலிஜின்னா, சி.அன்புமணவாளன், ரெத்தினவேல், சந்தானம், மாரிக்கண்ணு ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் மேற்படி குவாரி அமைக்க கோரியுள்ள 15 இடங்களிலும் தல ஆய்வு செய்து மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க நடவடிக்கையை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (அக்.28) நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் தவறும் பட்சத்தில் மீண்டும் எங்களது போராட்டம் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்கும் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.


Top