logo
வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்பட 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில்  வாக்கு எண்ணும் புதுக்கோட்டை மகளிர் கல்லூரி

வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்பட 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் வாக்கு எண்ணும் புதுக்கோட்டை மகளிர் கல்லூரி

16/Apr/2021 09:46:28

புதுக்கோட்டை, ஏப்: சட்டமன்ற தேர்தல் நடந்த புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிக ளில் மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 76.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இதில் வாக்குப்பதிவுக்காக புதுக்கோட்டையில் 346, அறந்தாங்கியில் 343, விராலிமலையில் 310, ஆலங்குடியில் 311, கந்தர்வகோட்டையில் 273, திருமயத்தில் 319 உள்பட மொத்தம் 1902 வாக்குச்சாவடி மையங்களில்   3401 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2331 கட்டுப்பாட்டு கருவிகளும், 2452 விவிபாட் இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ளபுதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 6 தொகுதிகளுக்கு தனிதனியே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு  அறைகளில்  வைக்கப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் விளக்குகள் கல்லூரி வளாகத்தில் ஒளிர்கின்றன.


 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்  வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்பட நான்கு அடுக்கு   போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.  முதல் அடுக்கில்  மத்திய துணை ராணுவத் தினரும், இரண்டாவது அடுக்கில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார், மூன்றாவது அடுக்கில்  தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினரும்,  நான்காவது அடுக்கில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகின்றனர். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை சிசிடிவி மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இதை, தேர்தல் பார்வையாளர்கள்,  தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்கள் டிஜிட்டல் திரை மூலம் பார்க்க முடியும். தினமும் 2  முறை தேர்தல்  நடத்தும் அலுவலர்களும், ஒரு முறை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்  நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

 அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மே.2 -இல் புதுகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அந்தந்தத்தொகுதிகளுக் கென ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் எண்ணும் பணி நடைபெறவுள்ளது                                                     


Top