logo
ஈரோடு மக்களுக்கு வரும் 10 நாட்களில் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர்:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஈரோடு மக்களுக்கு வரும் 10 நாட்களில் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

07/Jan/2021 10:25:46

ஈரோடு, ஜன: ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றம தேர்தல் பிரசார கூட்டத்தில்  முதல்வர் மேலும் பேசியதாவது:

ஈரோடு மாநகரில் பல்வேறு திட்டங்களை நமது அரசு வழங்கியுள்ளது. ரூ.484  கோடி மதிப்பில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் மூலம் ஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இன்னும் 10 நாட்களில் இத்திட்டம் மூலம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி நீர் வழங்கபடும் .அந்தத் திட்டத்தை நானே  இங்கு வந்து தொடங்கி வைப்பேன். 

இந்தத் திட்டத்தை அடிக்கல் நாட்டியதும். நானே .பாதாள சாக்கடை திட்டம், வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் ,சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ.62 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதன் மூலம் ஏழை மக்கள் உயர்தர சிகிச்சை பெற முடியும். தடையில்லா மின்சாரம் பெற புதைவட மின் திட்டம் ஈரோட்டில் செயல்படுத்தி வருகிறது. சாய கழிவு நீர் பிரச்சினைக்கு மத்திய அரசுடன் இணைந்து தீர்வு காணப்படும். இந்த தொகுதியில் மட்டும் 6- அம்மா மினிகிளினிக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து சித்தோடு வரை நான்கு வழி்ச்சாலை அமைக்கப்படும். இது போன்ற திட்டங்களை செய்து வருகின்ற போதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறை கூறி வருகிறார். இந்த ஆட்சியில்  எந்த ஒரு திட்டமும் நடைபெறவில்லை என்று பொய்யாக குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.

திமுக கட்சி ஒரு அராஜக கட்சி. திமுக நிர்வாகி ஒருவர் உணவகத்தில் சென்று நன்றாகச்சாப்பிட்டார். அதற்கு காசு கேட்ட உரிமையாளரை தாக்குகிறார்.மறுநாள் அந்த உரிமையாளரை மிரட்டி வழக்கு பதிவு செய்ய விடாமல் தடுக்கிறார். கட்டப் பஞ்சாயத்து செய்யும் கட்சி திமுக.மக்கள் நிம்மதியாக வாழ அம்மாவின் அரசு தான் பக்கபலமாக இருக்கும்.

 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500- வழங்கியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் 8 மாதங்களாக ரேஷன் கடைகளில் 40 கிலோ அரிசி பருப்பு சர்க்கரை வழங்கப்பட்டது. தேர்தல் வாக்குகள் வாங்க எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை மக்களின் சூழ்நிலை ஏற்ப தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

நெசவாளர் மானிய விலையில் மின்சாரம் வழங்கியுள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம். இது மக்கள் அரசு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசு. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக விருப்பன்சத்திரத்தில் 73 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்து கல்வி நிலையத்திற்குச் சென்ற முதலமைச்சர் தேனீர் அருந்தினார். அதைத்தொடர்ந்து சித்தோடு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வில்லரசம்பட்டியில் உள்ளபெட்டியில் உள்ள ரிசார்ட்டில்  தொழில் முனைவோர்,  வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் ஆகியோருடன் உடன் கலந்து உரையாடினார். இதையடுத்து மத்திய உணவு எடுத்துக் கொண்டார்.

Top