logo
மாநகராட்சி பகுதியில் 100 டன் ஆயுதபூஜை குப்பைக் கழிவுகள்  அகற்றம்

மாநகராட்சி பகுதியில் 100 டன் ஆயுதபூஜை குப்பைக் கழிவுகள் அகற்றம்

27/Oct/2020 10:50:15

ஈரோடு: ஆயுத பூஜை  கொண்டாட்டத்துக்குப்பிறகு  ஈரோடு மாநகர் பகுதியில் குவிந்து கிடந்த சுமார் 100 டன் குப்பைகளை துப்புரவுப்பணியாளர்கள் அகற்றினர்.

ஈரோடு மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில்,  ஆயுத பூஜைக்காக வீடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் சுத்தம் செய்தபோது ஏற்பட்ட கழிவு குப்பைகள் மாநகராட்சியில் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. 

இது தவிர, ஆயுத பூஜை பண்டிகைக்கு மீனாட்சி சுந்தரனார் சாலை,  மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காளைமாட்டு சிலை உள்ளிட்ட பல இடங்களில் விற்பனை செய்யப்பட்ட வாழை மரம் உள்ளிட்டவை விற்பனையானது போக மீதியை வியாபாரிகள் சாலையோரம்  குவியலாக விட்டு சென்று விட்டனர். 

இந்தக்குப்பைகளை இன்று(அக்.27) காலை முதல் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அள்ள, அள்ள குறையாத குப்பைகளை முழுமையாக அகற்ற தூய்மைப் பணியாளர்கள் திணறும் நிலை ஏற்பட்டது. 

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது,  ஈரோடு மாநகராட்சி முழுவதும் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை தவிர, 250 டன் குப்பைகள் கூடுதலாக சேர்ந்துள்ளது. வாழைக்கன்றுகள் உடனடியாக மக்காது என்பதால், உரமாக்க முடியாது. குப்பை கிடங்கில் போட்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரே இடத்தில் ஒரு டன் வரை குப்பை கொட்டப்பட்டுள்ளது. ஆயுத பூஜை குப்பையை அகற்ற குறைந்த பட்சம் இரண்டு நாட்களாகும்.இதுவரை 100 டன் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது என்றனர். 


Top