logo
கீழாநிலைக்கோட்டையில் வெடி குண்டு வீச்சு:  10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

கீழாநிலைக்கோட்டையில் வெடி குண்டு வீச்சு: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

27/Oct/2020 12:01:23

புதுக்கோட்டை மாவட்டம், கீழாநிலைக்கோட்டையில்  நள்ளிரவில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதில், 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.வெடிகுண்டு வீசிய பேரை பிடித்து போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீழாநெல்லி கோட்டையில் தனியாருக்கு சொந்தமான வானப்பட்டதை இயங்கி வந்தது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த வானப் பட்டறையில் வெடி விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து அந்த வெடிமருந்து தயாரிக்கும் பட்டறை மூடப்பட்டது 

மீண்டும் அதே இடத்தில் வானபட்டறையை இயக்குவதற்கு முயற்சித்தனர். ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென்று அப்பகுதியில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அங்கிருந்த சில வீடுகள் சேதமடைந்தன. வெடிகுண்டு சத்தம் கேட்டதும்  அப்பகுதி மக்கள் வெடிகுண்டு வீசியவர்களை மடக்கிப் பிடித்து பார்த்தபோது ஏற்கெனவே வானப்பட்டறை நடத்தி வந்த விக்னேஷ் மற்றும் விஜயகுமார் என்பது தெரியவந்தது.

உடனே அங்கிருந்த ஒரு வீட்டில் அவர்களை அடைத்து வைத்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களை வந்த காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

 நள்ளிரவில் வெடி குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து கிடங்கு உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து கே புதுப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


Top