logo
திருக்கோயில்களின் பணியாற்றும் பணியாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடக்கம்

திருக்கோயில்களின் பணியாற்றும் பணியாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடக்கம்

29/Jun/2021 11:32:27

சென்னை, ஜூன்: தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டலத்தில் உள்ள திருக்கோயிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான இலவச கொரோ னா நோய்த் தடுப்பூசி முகாமை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்   பி.கே.சேகர் பாபு, திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள்.

சென்னை, புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு லட்சுமி மஹாலில்  (28.06.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை  மற்றும்  சென்னை மண்டலத் தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்குமான இலவச கொ ரோனா நோய்த்தடுப்பூசி முகாமை  தொடங்கி வைத்தனர். 

கொரோனாநோய்த் தொற்று குறைவாக உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 28.06.2021 முதல் நிலையான வழிகாட்டி முறைகளைப் பின்பற்றி வழிபாட்டு தலங்களைத் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி, சென்னை மண்டலத்தில் உள்ள திருக்கோயில்களைத் திறக்க ஏதுவாக  திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது . சென்னை  மணடலத்திலுள்ள  திருக்கோயிலில் பணியாற்றும் 463 பணியாளர்களுக்கு  (28.06.2021) கொரோனா நோய்த் தடுப்பூசி போடப்படுகிறது என்று அமைச்சர்  பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்  ஜெ. குமரகுருபரன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பின பரந்தாமன், பகுதி செயலாளர் திரு.வேலு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல இணை ஆணையர்கள் சி.ஹரிப்ரியா,ரேனுகாதேவி மற்றும் சுகாதார அலுவலர்கள்  ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.



Top