18/Feb/2021 07:23:16
புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் பெரும்பான்மை தொடர்பான சர்ச்சை நீடித்து வந்த நிலையில் புதிய ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் வரும் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அரசின் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டுமென முதல்வர் வெ. நாராயணசாமிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இரு தரப்பிலும் தலா 14 உறுப்பினர்கள் பலம் இருப்பதாகக்கூறப்படும் நிலையில், புதுச்சேரி அரசு தப்புமா அல்லது பதவியிழக்குமா என்பதே அம்மாநில மக்களின் முன் நிற்கும் மாபெரும் கேள்வியாகும்.