logo
பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது: சாலைப் பணியாளர் சங்கம்

பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது: சாலைப் பணியாளர் சங்கம்

11/Jan/2021 09:34:00

புதுக்கோட்டை, ஜன:  சாலைப் பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதைத் கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சாலைப் பணியாளர் சங்கத்தின் 7-ஆவது மாவட்ட மாநாடு புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப.முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜபருல்லா பேசினார். மாவட்டச் செயலாளர் கே.ராஜாராம், பொருளாளர் எம்.பிரேம்குமார் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி தோழமைச் சங்க நிர்வாகிகள் ஆர்.ரெங்கசாமி, ஏ.பழனிச்சாமி, கே.குமரேசன், சு.குணசேகரன், க.சுப்பையா உள்ளிட்டோர் பேசினர்.

புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில செயலாளர் எஸ்.மகேந்திரன் உரையாற்றி னார்.  மாவட்டத் தலைவராக ப.முத்துக்கருப்பன், செயலாளராக ஏ.கருப்பையா, பொருளாள ராக  கே.தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் சிறப்புரையாற்றினார். அஞ்சலி தீர்மானத்தை வி.ரெங்கசாமி வாசித்தார். முன்னதாக ஏ.கருப்iபாய வரவேற்க, கே.சோனைமுத்து நன்றி கூறினார்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கான ஊதியத்தை சாலைப் பணியாளர்களுக்கு நிர்ணம் செய்து 7-ஆவது ஊதிய மாற்றப் பலன்களை வழங்க வேண்டும்.

பணி நீக்க காலத்தில் இறந்துபோன சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலைப் பணியாளர் காலிப்பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


Top