logo
எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு

எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு

23/Oct/2020 08:42:58

ஈரோடு: எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது.  அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


 மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு தேர்வில் மதிப்பெண் அடிப்படையிலும், வருகை பதிவேடு அடிப்படையிலும் பொதுத் தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு இன்று பள்ளிகளில் மதிப்பெண் சான்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வேலைவாய்ப்பு பதிவு செய்யவும் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

அதன்படி, (அக்.23) வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்ட பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. முக கவசம் அணிந்து வந்த மாணவ மாணவிகள் மட்டுமே பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அவர்கள் கைகளில் சனிடைசர்  கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் இதற்கென்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.  மாணவ மாணவிகளுக்கு  அவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கினர்.

 இதையடுத்து வேலைவாய்ப்பில் பதிவு செய்வதற்காக தனியாக மாணவ மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதை மாணவ மாணவிகள் பூர்த்தி செய்தனர். மேலும் வரும்போதே ஆதார் கார்டு,  ரேஷன் கார்டு மதிப்பெண் சான்றிதழ் ஜெராக்ஸ் ஆகியோரை கொண்டுவர வலியுறுத்தி இருந்தனர். இதை  கொண்டு வந்த மாணவ மாணவிகள் மதிப்பெண்களுடன் வேலைவாய்ப்பு பதிவு செய்தனர். 

இப்போல்  ஈரோடு மாவட்டம் முழுவதும் மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொண்டனர். கூட்டம் செல்வதை தவிர்க்கும் வகையில் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். மாணவ மாணவிகள் சமூக இடைவெளி யை கடைப்பிடித்து வரிசையில் நின்று மதிப்பெண் சான்றிதழ் வாங்கி சென்றனர். இன்று முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு வேலை வாய்ப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 


Top