logo
புதுகைக்கு வரும் தமிழக முதல்வரை பாரம்பரியமுறையில் வரவேற்க ஜி.எஸ். தனபதி அழைப்பு

புதுகைக்கு வரும் தமிழக முதல்வரை பாரம்பரியமுறையில் வரவேற்க ஜி.எஸ். தனபதி அழைப்பு

20/Oct/2020 11:21:50

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கனவான காவிரி உபரிநீரை புதுக்கோட்டைக்கு கொண்டு வர முதல்கட்டமாக காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தினை செயல்படுத்த இந்த ஆண்டு ரூபாய் 700 கோடி நிதி ஒதுக்கிக் கொடுத்துள்ள  தமிழக முதல்வர்  எடப்பாடியார் அவர்கள் வருகிற 22-10-2020 வியாழக்கிழமை  புதுக்கோட்டை வருகிறார்.

முதல்வர் அவர்களை நமது மாவட்ட அனைத்து விவசாயிகள் சார்பில் கவிநாடு கண்மாய் அருகிலிருந்து மாட்டுவண்டிகள் சகிதம் பாரம்பரிய முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அதுசமயம்  நமது விவசாயிகள் பெருந்திரளாக பச்சைத் துண்டோடு, முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பெருந்திரளாக கலந்துகொள்ள காலை 11 மணி அளவில் கவிநாடு கண்மாய் அருகில் வருகை தரவேண்டுமென அனைத்து விவசாயிகள் சங்க நண்பர்களையும் விவசாயிகளையும்  இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் புதுக்கோட்டை ஜி.எஸ். தனபதி  கேட்டுக்கொண்டுள்ளார். 


Top