logo
நடிகர் விஜய் வீட்டை சுற்றி வளைத்தது வருமான வரித்துறை

நடிகர் விஜய் வீட்டை சுற்றி வளைத்தது வருமான வரித்துறை

12/Mar/2020 07:30:52

நடிகர் விஜய் வீட்டில் இரண்டாவது முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் தான் நடிக்கும் படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகம் எழுந்து இருப்பதாக கூறி அவரது வீட்டில் பிப்ரவரி 5ஆம் தேதி  வருமான வரித்துறைஅதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது காரிலேயே அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அவர்களுக்கு அங்கு எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் இவ்வேளையில் இந்த சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Top