19/Oct/2020 05:17:25
புதுக்கோட்டை தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் நவராத்திரி கர்நாடக இசை விழா நடை பெற்றது.
விழாவுக்கு, தலைவர் மஞ்சுநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சங்கரநாராயணன் அனைவரையும் வரவேற்றார். மூத்தஉறுப்பினர் ராஜலெட்சுமி முன்னிலை வகித்தார்.
நவராத்திரி கலை விழாபற்றி தலைவர் மஞ்சுநாதன் பேசினார். பின்னர், மிருதங்கம் ராஜா நடுவராக இருந்து நடைபெற்ற இசை போட்டியில் இசை மாணவ,மாணவிகள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பாடினர்.
இதில், மாணவி அபூர்வாவுக்கு முதல் பரிசும், லலிதாஸ்ரீநிதிக்கு இரண்டாம் பரிசும், ஹரிதாரிணி மூன்றாவது பரிசும் வென்றனர். அனைவருக்கும் மிருதங்கம் ராஜா பரிசளித்து வாழ்த்தினார். மேலும் இசை போட்டியில் கலந்து கொண்ட அனைவருக் கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் பொருளாளர் சேகர், உமா உட்பட பலர் கலந்து கொண்டனர். மகளிரணிச் செயலாளர்சுப்புலட்சுமி, நன்றி கூறினார்.