logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது மற்றும் முழு ஊரடஙகு நடவடிக்கைகள்: ஏடிஜிபி  ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது மற்றும் முழு ஊரடஙகு நடவடிக்கைகள்: ஏடிஜிபி ஆய்வு

09/May/2021 05:42:27

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது மற்றும் முழு ஊரடஙகு நடவடிக்கைகள் குறித்து  ஏடிஜிபி சனிக்கிழமை  ஆய்வு  மேற்கொண்டார்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பது மற்றும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள்  குறித்து திருச்சி சரகத்தைச் சேர்ந்ந்த 5 மாவட்டகளுக்கு சிறப்பு ஆதிகாரியாக நியமிக்கப்பட்ட கூடுதல் காவல்துறை இயக்குநர் அமரேஷ் புஜாரி  (Technical Cell)  சனிக்கிழமை  (8.5.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில்; ஆய்வு மேற்கொண்டார்.

 புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக. பாலாஜி சரவணன், கூடுதல் காவல் கண்காணிப் பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோ ருடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலை தடுப்பது மற்றும் முழு ஊரடங்கு காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கை, ஆக்ஸிஐன் சிலிண்டர் வாகனங்கள் போக்குவரத்தின் போது பாதுகாப் பு முன்னெச்சரிக்கைகள், தடுபபு ஊசிகள் போடுவது குறித்த விழிப்புணர்வு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் படுக்கைகள் விவரம், ஆக்ஸிஐன் படுக்கைகள் விவரம் மற்றும் முழு ஊரடங்கு அமுல்படுத்துவது குறித்த அறிவுரைகளை வழங்கினார். 

புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி  வரும் கொரோனா சிறப்புக் கட்டுப் பாட்டு அறை ஆகியவற்றை பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார்.  

 

Top