logo
ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 222 மாணவ,மாணவிகளில் 28 சதவீதம் பேர் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 222 மாணவ,மாணவிகளில் 28 சதவீதம் பேர் தேர்ச்சி

18/Oct/2020 06:43:39

ஈரோடு:நாடு முழுவதும் கடந்த செப்.13-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 222 மாணவ,மாணவிகள் சேலம், கோவை போன்ற மாவட்டத்தில் அமைக்கப்பட் டிருந்த தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினர். இந்நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 222 பேரில், 28சதவீதம் பேர் அதாவது 62 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கவுந்தப்பாடி அரசு பள்ளி மாணவர் அதிக மதிப்பெண்

நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த மாணவர் பூபதிஎன்பவர் 559 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


Top