logo
 வேளாண் சட்டங்களை கண்டித்து ஈரோட்டில்  ஏர்கலப்பையுடன் காங்கிரஸார்  கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை கண்டித்து ஈரோட்டில் ஏர்கலப்பையுடன் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

18/Dec/2020 10:14:43

ஈரோடு-டிச: கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்தில் ஈரோடுமாவட்டகாங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தலைமையில் வேளாண் சட்டங்களை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 மத்தியஅரசு கொண்டுவந்துள்ள மூன்றுவேளாண் சட்டங்களைதிரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக  தில்லியில் கடும் குளிரிலும் போராடிவருகின்றனர். அவர்களுக்குஆதரவாக தமிழகத்திலும்  பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, ஈரோடுமாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்  கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தலைமையில் வேளாண் சட்டங்களை கண்டித்து ஏர்கலப்பையுடன் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தகண்டனஆர்ப்பாட்டத்தில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசுகையில்,  மத்தியஅரசு வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளை வளர்ப்பதாகவும் காப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இச்சட்டத்தினால் விவசாயிகளை முழுக்க முழுக்க அடிமையாக்குகின்ற செயலாகும். அடுத்தாக மின்சாரத்தை இலவசமாகத் தருவதையும் ஒழித்துவிடுவார்கள் அதை விட முக்கியம் நூறு நாள் வேலைத் திட்டத்தையும் ஒழித்துக்கட்டி விடுவார்கள்.

விவசாயிகளை அடிமையாக்க வேண்டும் என்றுதான் மோடி இத்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். அமித் ஷா ஒரு அண்டப் புளுகன். இலங்கiயில் தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்தது காங்கிரஸ் அரசு. ஆனால் அதை பாஜக தான் கட்டிக் கொடுத்ததாகப் பொய் பேசியுள்ளார் என்றார் அவர். 

 ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த சத்தியமங்கலம் அந்தியூர் நம்பியூர் பவானி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்.


Top