logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்குவதற்கு தயார் நிலையில்  அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்குவதற்கு தயார் நிலையில் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள்

27/Jun/2021 07:47:06

 

புதுக்கோட்டை, ஜூன்: தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி போக்குவரத்து அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பேருந்துகளை திங்கள்கிழமையிலிருந்து இயக்கத் தயாராகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ்  தொற்று  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால்  தமிழக அரசு தமிழகம் முழுவதும் முழு  முடக்தத்தை  கடந்த மாதம் மே10-ஆம்  தேதி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 48 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதுஇதனால் தமிழக அரசு பல்வேறு  ஊரடங்கு  தளர்வுகளை அறிவித்து  நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்து உள்ள 27 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூன்28) முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


இதில் புதுக்கோட்டையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பேருந்துகளில் ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேருந்துகளின்  டயர்கள், பேட்டரி உள்ளிட்ட முக்கியமான பாகங்களை சரிபார்த்து புதுப்பிக்கும் பணிகளில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மேற்கொண்டு  வருகின்றனர். திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது.

 புதுக்கோட்டை  போக்குவரத்துக்கழக மண்டலத்தில் மொத்தம்  9 கிளைகளும் அதில் ஒரு கிளை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலும்   உள்ளது, இவற்றின் மூலம்  இயக்கப்பட்டு வரும்  385 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது இதில் 120 நகர பேருந்துகள், 135  புறநகர் பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்படவுள்ளதால் அதனை தயார் நிலையில் வைக்கும்  பணிகள்  தற்போது முழுவீச்சில் நடைபெறுவதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 48 நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத பயணிகள் மட்டுமே  பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்பயணிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் மாஸ்க் இல்லாதவர்களுக்கு மாஸ்க்களும் பேருந்துகளில் இருப்பில் வைக்கும்  பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top