logo
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து  குறைந்தது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

18/Oct/2020 06:39:02

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை ஆகும். 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி  உள்ளது. நீலகிரி மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால்  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

 இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 99.32 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 1,028 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து  950 கனஅடி வீதம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

இதைப் போல் தொடர்ந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கனஅடி வீதம் தண்ணீர் என மொத்தம் 3,250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் வரத்தை காட்டிலும் பாசனத்துக்காக தண்ணீர் அதிகளவு திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 


 

Top