logo
குளித்தலை அய்யர் மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் கோயிலில் கம்பி வட  (ரோப்கார் ) ஊர்தி வசதி: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு

குளித்தலை அய்யர் மலை அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் கோயிலில் கம்பி வட (ரோப்கார் ) ஊர்தி வசதி: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

16/Jun/2021 09:40:34

கரூர், ஜூன்: கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர் மலையில் உள்ள அருமிமிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் கம்பி வட ஊர்தி (ரோப்கார் வாதி) அமைக்கும் பணிகளை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு  (16.6.2021)  நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறியதாவது: குளித்தலை அய்யர் மலையில் உள்ள அருமிமிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் கம்பி வட ஊர்தி (ரோப்கார் வாதி) அமைக்கும் பணிகள்  விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின்  பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை. எடுக்கப்படும்.

குளித்தலை அய்யாமலையில் அமைந்துள்ள  அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 1117 படிக்கட்டுகளிலும் நடந்து சென்று வருகின்றனர்.  2010 -ஆம் ஆண்டு  தமிழ்நாடு  முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால், இந்த மலைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2015 -ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2017 -ஆம் ஆண்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு 18 மாத கால அளவிற்குன பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

தொடர்ந்து இந்த ரோப்காரை விரைவில் அமைதி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில்மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர்  இரா.மாணிக்கம் ஆகியோர் முழு முயற்சி எடுத்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ரூ.6.70 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் திட்டத்தை முழுவேகத்தோடு நிறைவேற்ற பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

ரோப்கார் அமைக்கும் வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், இந்த ஆய்வு நடைபெறுகின்றது. பணிகளை துரிதப்படுத்தும் வகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கள ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப்பகுதியில் ரோப்கார் அமைக்கும் வசதி  கடந்த ஜனவரி மாதமே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இருந்தாலும் முழுமையான பணிகள் முடிவுறவில்லை. எனவே, இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது,முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க முழுவீச்சில பணிகளை துரிதமாக முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் முதன்முதலாக நின்று வெற்றி பெற்ற தொகுதி குளித்தலை தொகுதியாகும். அந்த தொதியில் பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கோரிக்கை வந்தால் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தை   வழங்குவது குறித்து உரிய பரிசீலனை மேற்கொண்டு  விதிகளுக்குள்பட்டு  முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைய தேவையான வசதிகள் செய்ய அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டா..பிரபுசங்கர், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர்  நாகராஜன்(திருப்பூர்), சுதர்சனம்(திருச்சி), உதவி ஆணையர்கள் சூரியநாராயணன், நந்தகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Top