logo
பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை... அகற்காக ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை- செங்கோட்டையன் தகவல்

பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை... அகற்காக ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை- செங்கோட்டையன் தகவல்

18/Oct/2020 06:29:09

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய சாலைகள் பூமி பூஜை மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொளப்பலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 93 பயனாளிகளுக்கு 93 லட்சம் ரூபாய் மதிப்பில்  கறவை மாட்டுக்  கடனுதவிகளை வழங்கினார்.

அதன் பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் மேலும் அவர் கூறியது: அத்திகடவு, அவிநாசி திட்டம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டும் இன்று வரை பவானிசாகர் அணையில் 101 அடி தண்ணீர் இருந்து வருகிறது. இதனால் விவசியிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கி முதல்வர் சட்டம் இயற்றியுள்ளார்.

பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை

பள்ளிகள் திறக்க ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இபாக்ஸ் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது முதல் முயற்சியில் நீட் தேர்வில் தோல்வியுற்று இரண்டாம் முறை நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி  மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் தான் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும்.அரசு பயிற்சி் வழங்காது என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


Top