logo
ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட்டில் விதிகளை மீறிய 20 கடைகளுக்கு  அபராதம் விதிப்பு

ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட்டில் விதிகளை மீறிய 20 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

06/May/2021 03:39:24

ஈரோடு, மே: ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட்டில்  கொரோனா தடுப்பு விதி முறைகளை மீறியதாக 20 கடைகளுக்கு  மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு நேதாஜி பெரிய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு ஈரோடு ..சி பூங்கா பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், காலை நேரங்களில் சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வேகமெடுத்து உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்

 இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் நேதாஜி பெரிய மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மார்க்கெட் வெளிப்பகுதியில் சில வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதையடுத்து வெளிய கடைகள் அமைத்து வியாபாரம் செய்த 20 கடைகளுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

இனிமேல்  வெளியே கடைகள் அமைக்க அனுமதி இல்லை. அதை மீறி கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கை விடப்பட்டது. இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் விஜயகுமார், நகர் நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர், துப்புரவு ஆய்வாளர் கண்ணன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Top