logo
முடிந்தது புரட்டாசி மாதம்.. இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

முடிந்தது புரட்டாசி மாதம்.. இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

18/Oct/2020 06:22:09

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி மார்க்கெட்,இறைச்சிக்கடை, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாதமாக இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தைகள், சின்ன மார்க்கெட் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. காய்கறிகளின் விலையும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், போன வாரத்துடன் புரட்டாசி மாதம் முடிந்ததால் மீண்டும் வழக்கம்போல் இறைச்சிக்கடை ,மீன் கடையில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  இன்று(17.101.2020)  காலை முதலே ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகளிலும், ஸ்டோனி பிரிட்ஜ்  பகுதியில் உள்ள மீன் சந்தையிலும் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. 

நாகப்பட்டினம், தூத்துக்குடியில் இருந்து கடல் மீன்களின் வரத்து அதிகளவில் இருந்ததும், புரட்டாசி மாதம் முடிவடைந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை  கடந்த வாரத்தை காட்டிலும்  இந்த வாரம் மீன்கள் விலை கிலோவுக்கு ரூ.100 அதிகரித்திருந்தது.அதைப்போல்  உயிருடன் உள்ள நாட்டுக்கோழி கறி ஒரு கிலோ ரூ.600 -க்கும் கறி ஒரு கிலோ ரூ.660 முதல்  750 வரைக்கும் விற்பனையானது.

இதேபோல் ஆட்டிறைச்சி ஒரு கிலோ ரூ. 700 -க்கு விற்பனையானது. ஈரோடு வ.உ.சி  பகுதி செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட், உழவர் சந்தையிலும்   மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 


Top