logo
மருததுவப்படிப்பில் உள் இடஒதுக்கீடு பெற்றுத்தர முதல்வர் தீவிர நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

மருததுவப்படிப்பில் உள் இடஒதுக்கீடு பெற்றுத்தர முதல்வர் தீவிர நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

17/Oct/2020 02:54:21

ஈரோடு: மாணவர்களுக்கு மருததுவ உள் இட ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்க முதல்வர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார் என்றார்  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம்,கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுகவின் 49-ஆவது ஆண்டு விழாவையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர்,  அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக வின் 49 -ஆவது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் உயிருள்ளவரை நிரந்தர முதல்வராக இருந்தவர்.

எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர். வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று பொன்விழா ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பார். அரசு பள்ளியில் படித்த மாணவர் 664 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். 

புதிய பாடத்திட்டங்களில் அதிக அளவில் கேட்கப்பட்டுள்ளது. இதை நாடே வியந்து பாராட்டி வருகிறது. கிராமபுற மாணவர்களுக்கு மருததுவ உள் இட ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்க முதல்வர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்.

முதல்வரால் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் மாணவர்களின் நலனில் உள்ள அக்கரையைக் காட்டுவதாகவும் அதிமுக அரசு  மக்களுக்கான அரசு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நேசிக்கிற முதல்வராக இருப்பார். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Top