logo
அதிமுகவில்  புதுக்கோட்டை, திருப்பூர், விருதுநகர் ஆகிய 3  மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செயலர்கள் நியமனம்

அதிமுகவில் புதுக்கோட்டை, திருப்பூர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செயலர்கள் நியமனம்

12/Nov/2020 01:09:22

சென்னை: இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாயார்  எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகஅமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளாராக முன்னாள் எம்.பி. சி.மகேந்திரன்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக பி.கே. வைரமுத்து. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக எம்.பி. வைத்திலிங்கம், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன்.விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 


Top