16/Oct/2020 07:14:24
புதுக்கோட்டை பல்லவன் குளம் வடக்கு கரையில் அமைந்துள்ள அருள்மிகு விட்டோபா பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத நிறைவுநாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலயத்தில் மூலவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.
சுவாமி அன்ன திருபாவாடை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.