logo
ஈரோடு மாவட்டத்தில் 2-ஆவது நாளாக இரவில் பரவலாக பெய்த மழை :மின்வெட்டால் மக்கள் அவதி

ஈரோடு மாவட்டத்தில் 2-ஆவது நாளாக இரவில் பரவலாக பெய்த மழை :மின்வெட்டால் மக்கள் அவதி

04/Jun/2021 03:32:44

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் 2-ஆவது நாளாக இரவில் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியும் மின்தடையால்  வேதனையும் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் வெயில் தாக்கம் உச்சத்தில் இருந்தது. மேலும் உஷ்ணத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் மக்கள், முதியவர்கள் குழந்தைகள்  வெயிலின் தாக்கம் காரண மாக  கடும் அவதியடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் மாவட்டத்தில்   கடந்த  இரண்டு நாள்களாக இரவு நேரங்களில்  பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக ஈரோடு மாநகரம் ,கவுந்தப்பாடி, பவானி பவானிசாகர், சத்தியமங்கலம் என மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. 

வியாழக்கிழமை  2-ஆவது நாளாக காலை வழக்கம் போல் வெயில் வாட்டியது. மதியம் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.  இந்நிலையில் இரவு 7.50 மணிக்கு லேசாக மழை பெய்ய தொடங்கியது அடுத்த சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது சுமார் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்தது. 

இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாநகரில் பல்வேறு பகுதியில் சுமார் 2 மணி நேரம் முதல்  4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு , நம்பியூர் , சத்தியமங்கலம், எலந்த குட்டை மேடு , கோபி,  நம்பியூர் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்  பகுதிகளிலும் மழை பெய்தது.


Top