logo
புதுக்கோட்டையில் வாக்காளர் சுருக்க, திருத்தப்பட்டியல் குறித்த ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டையில் வாக்காளர் சுருக்க, திருத்தப்பட்டியல் குறித்த ஆலோசனைக்கூட்டம்

15/Oct/2020 02:15:44

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற வாக்காளர் சுருக்க,திருத்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் நீக்கல் சேர்த்தல் வாக்குச்சாவடிகளை பிரித்தல் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் வரையறை பணிகள் மேற்கொள்வது குறித்து நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் சுருக்க திருத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆலோசனைப்படி கோட்டாட்சியர் தண்டாயுதபாணி  தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா,தாசில்தார் முருகப்பன், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர் இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரமுகர்கள், வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் தொலைபேசி எண்களை அரசியல் கட்சி பிரமுகர்களிடம் வழங்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை உடனடியாக நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர் உள்ள நபர்களை நீக்கம் செய்யும் பணியை துரிதமாக செய்ய வேண்டும், தேர்தல் நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க போதுமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

பூத்த ஏஜெண்டுகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க, என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அரசியல் கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்ட  கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையிலான அதிகாரிகள் அவற்றை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.

இதன் பின்னர், புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே தேர்தல் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த சீல் வைக்கப்பட்டிருந்த அறையை அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு 267 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Top