29/Dec/2020 11:25:16
ஈரோடு, டிச: ஈரோடு வீரப்பன் சத்திரம் அதியமான் நகரை சேர்ந்த சுப்பையா மகன் ஆறுமுகம்(38). மர வேலை செய்யும் தச்சு தொழிலாளி. ஆறுமுகம் நேற்று முன்தினம் ஈரோட்டில் இருந்து பவானி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எம்.ஜி.ஆர். நகர் பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாரதவிதமாக ஆறுமுகம் மீது மோதியது.
இதில், தலை மற்றும் உடலில் பலத்த ரத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத் தினர் ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஆறுமுகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன ஆறுமுகத்திற்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.