logo
கூட்டணி கட்சியினர் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம் எம்.பி

கூட்டணி கட்சியினர் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம் எம்.பி

11/Oct/2020 07:38:53

புதுக்கோட்டை: கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினர் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லை என்றார் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். 

புதுக்கோட்டை  மாவட்டம், ஆலங்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர் களிடம் மேலும் அவர் கூறியது:  கடலூர் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவரை தரையில் அமரவைத்தது கடும்.கண்டனத்திற்குரியது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது கடும்.எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி நாட்டின் சாபக்கேடு. 

கரோனா பொதுமுடக்கத்தால் சிறுதொழில் முதல் பெரும் தொழில்கள் வரை அனைத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களுக்கு மத்திய அரசு எவ்வித உதவியையும் செய்யவில்லை. 

உலக அளவில் எந்த நாட்டில் இல்லாத அளவிற்கு.இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி 23.9% உள்ளது. ஆன்லைன் வகுப்புகள்.வரவேற்க கூடியதாக இருந்தாலும், இணையதள வசதி, செல்லிடப்பேசி, கணிணி உள்ளிட்ட வசதிகள் இல்லாத கிராம புறங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதை அரசு உரிய முறையில் கையாளவில்லை.கரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகப்படுத்தாமல், பொதுமுடக்கத்தை.மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது பெரும் தவறு. இனிமேல், முழுப்பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் மேலும், பொருளாதார வீழ்ச்சி.ஏற்படும். 

அப்படி பொதுமுடக்கத்திற்கு அவசியம் ஏற்பட்டால், இங்கிலாந்து, அமெரிக்கா போன்று தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிவாரண  உதவிகள் செய்யவேண்டும். ஆனால், ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததாக மத்திய அரசு.அறிவித்தது. அதில், ஒருவர் கூட பயனடைந்ததாக தெரியவில்லை. இந்த அறிவிப்பு ஒரு மாயை. நிவாரண உதவிகளை வழங்காமல் தொழில்செய்பவர்களை மேலும், கடன்.வாங்க சொல்கிறது மத்திய அரசு. 

அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை.முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் விபத்தால் பதவிக்கு  வந்தவர்கள். எங்கள் கூட்டணிக்குள் அந்த.பிரச்னைகள் ஏதும் இல்லை. எதிர்வரும் சட்டப்பரேவை தேர்தலில் திமுக கூட்டணி. வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி. 

கூட்டணியில்.காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். மதிமுக பொதுச்செயலர் வைகோ தனிச்சின்னத்தில் போட்டியிட.கோருவதில் எவ்வித தவறும் இல்லை. கூட்டணிக்குள் எவ்வித குழப்பமும் இல்லைஎன்றார்.

 நிகழ்வில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.புஸ்வராஜ், மாவட்டத்.தலைவர் தர்ம.தங்கவேல், மாவட்ட துணைத் தலைவர் மா.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Top