logo
கொரோனா: உலக அளவில் 3.70 கோடி பேர் பாதிப்பு: 10.72 லட்சம் பேர் பலி

கொரோனா: உலக அளவில் 3.70 கோடி பேர் பாதிப்பு: 10.72 லட்சம் பேர் பலி

10/Oct/2020 07:31:45

உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.70 கோடியாக அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளிலேயே அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2-ஆம் தேதிதான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் மட்டும் 3,30,340 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சர்வதேச அளவில் இதுவரை 3,70,93,523 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 72 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 2, கோடிய 78 லட்சத்து 85 ஆயிரத்து 855 பேர் குணமடைந்துள்ளனர். 

நாட்டில் கொரோனா பாதிப்பு 69,79,424: பலி 1,07,416 ஆக அதிகரிப்பு.  நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக  உயர்ந்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 73,272 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்: சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 926 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த கொரோனா பாதிப்பில் 1.54 சதவீதமாகும். புதிதாக 73,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த கொரோனா பாதிப்பு 69,79,424 ஆக அதிகரித்துவிட்டது. 

எனினும், இதுவரை 59,88,823 பேர் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர். ஒரே நாளில் 82,753 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 85.81 சதவீதமாகும்.  இப்போதைய நிலையில் 8,83,185 பேர் நாட்டில் கொரோனா பாதிப்புடன் உள்ளனர். இது 12.65 சதவீதமாகும். சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போர் எண்ணிக்கை 9 லட்சத்துக்குகீழ் குறைந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 39,732 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கர்நாடகத்தில் 9,789 பேரும், ஆந்திர மாநிலத்தில் 6,159 பேரும், தில்லியில் 5,692 பேரும் கொரோனாவால் பலியாகினர்.

தொற்று பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரம் இரண்டாவது இடத்திலும், கர்நாடகம் மூன்றாவது இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும் இருந்து வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவல்படி அக்டோபர் 8-ஆம் தேதி வரை 8,46,34,680 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சனிக்கிழமை மட்டும் 11,64,018  பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னையில் கொரோனா  பாதிப்பு நிலவரம்:

அம்பத்தூர் உள்பட 6 மண்டலங்களில் மீண்டும் ஆயிரத்தை எட்டிய கொரோனா நோயாளிகள் சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை காலை நிலவரப்படி 13,446 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் 6 மண்டலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிவிட்டது.

சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 79,424- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 3,373 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதித்து வந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தை அண்மையில் எட்டியது.வெள்ளிக்கிழமை மேலும் 1,288 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 79,424-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1 லட்சத்து 62,605 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 13,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 3,373- ஆக அதிகரித்துள்ளது.

அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் 1,300 என்ற அளவிலும், திருவிக நகரில் 1,200 என்ற அளவிலும், அம்பத்தூர், அடையாறில் 1000-க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் உள்ளனர். கடந்த மாதம் இறுதி வரை கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்திருப்பது சென்னை வாசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.



Top