logo
பவானி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணன்  வேட்பு மனு தாக்கல்

பவானி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் வேட்பு மனு தாக்கல்

15/Mar/2021 05:55:55

ஈரோடு மார்ச்: சட்டமன்ற தேர்தலில்  பவானி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரான  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பவானியின் பிரசித்திபெற்ற  கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் புடைசூழ கூடுதுரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பவானி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரான வாணிலட்சுமி ஜெகதாம்பாளிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை  உறுதிமொழியினை தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு எடுத்துக்கொண்டார். அமைச்சர் கருப்பணன் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பாமக  மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் பாஜக  மாவட்ட தலைவர் அஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top