logo
ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் 10,502 பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 10,502 பேருக்கு கொரோனா பரிசோதனை

25/Jun/2021 04:36:20

ஈரோடு,ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் 10,502 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. முதலில் தினமும் 2,000 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் நோயின் தாக்கம் காரணமாக தற்போது பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
 ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் தினமும் ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர் பகுதியில் தினமும் 6000 முதல் 6,500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை  ஒரே நாளில் 10 ஆயிரத்து 502 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 9 லட்சத்து 43 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்  பரிசோதனை எண்ணிக்கையை  அதிகரித்ததன் மூலம் நோய் பாதித்தவர்கள் உடனுக் குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு  தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் விரைவில் குணமடைந்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Top