logo
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

20/Mar/2020 05:44:48

சிட்டுக்குருவிகள் இனத்தை அழியாமல் காக்க மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடி வருகின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.

  சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவை இனத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக்குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், சிட்டுக்குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இது மனிதனுக்கு நன்கு அறிமுகமான ஒரு பறவையாகும். உருவத்தில் சிறியவையாகவும், சாம்பல் கலந்த பழுப்பு நிறம், மங்கலான வெள்ளை நிறம் என்று பல நிறங்களில் காணப்படும். இவை 8 முதல் 24 சென்டிமீட்டர் நீளமுள்ளது. கூம்பு வடிவ சிறிய அழகும், 27 முதல் 39 கிராம் எடையும் கொண்டவை. ஆண் பறவையிலிருந்து பெண் பறவை வேறுபட்டிருக்கும். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குருவி இனங்கள் அதிகம் உள்ளன. சிட்டுக்குருவியின்  வாழ்நாள் 13 ஆண்டுகள் ஆகும். இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மனிதர்கள் இருக்கும் பகுதியில் வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இயற்கையின் படைப்பில் அனைத்து விலங்குகளும் சமம். மேல்நிலை விலங்காக மனிதன் இருந்ததால் மற்ற உயிர்களை கொன்று தின்று மிகப் பெரிய அறிவு ஜீவி  நாம் என்ற செருக்குடன் நடைபோடும் போதுதான் பிரச்சனைகள் தொடங்கியுள்ளது.

டார்வின் மிதமிஞ்சிய கோட்பாட்டின்படி மனித இனம் மிதமிஞ்சி போனதால் அழிவின் விளிம்பில் நிற்கிறது  உலகம். சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும், பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது சிட்டுக்குருவிகள் இனம் நகர்ப்புறங்களில் முற்றிலுமாக அழிந்துவிட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியின் இனப்பெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதால் இவற்றால் தங்கள் இனத்தைப் பெருக்க இயலவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. நாள்தோறும் அவை வாழ்வதற்காக எதிர்நோக்கும் பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். எனவே மார்ச் 20-ம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடி அவற்றைக் காக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகளை வெளியிட்டு பெருமைப்படுத்தி பெருமைப்படுத்தியுள்ளன

Top