logo
மாநகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்:  ஈரோடு ஆணையர் தகவல்

மாநகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்: ஈரோடு ஆணையர் தகவல்

07/Oct/2020 11:26:38

ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸை அழிக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, மாநகராட்சி ஆணையர்  இளங்கோவன் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணியில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகள், எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும் பணி தொடந்து நடக்கிறது. தொற்றில்லா பகுதிகளில் சாலை, சாக்கடை ஓரங்களில் சுண்ணாம்பு தெளிக்கப்படுகிறது. ஊராட்சி கோட்டை குடிநீர்த் திட்டப்பணிக்காக தோண்டிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன.. 

மேலும், ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகளில், 1.30 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளில் இருந்து வெளியேறும், சமையலறை கழிவு நீர், குளியலறை கழிவு நீர், கழிவறை கழிவு நீர், சாக்கடைகளில் கலப்பதை தடுக்கும் வகையில் புதைசாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை பணிகள் முடித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று, இரண்டு, மண்டலங்களில், 10ஆயிரம் இணைப்புகள் இன்னும் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

மூன்று, நான்கு மண்டலங்களில், 28 ஆயிரம் வீடுகளில், 15ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. புதைசாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி குறைந்துள்ளது. மழை காலத்தில் சாக்கடையில் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும், சாலைகளுக்கு மழை நீர் செல்லாதுவாறு, ஓடைகள், சாக்கடை, கால்வாய்கள் தூர் வார  தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். 


Top