logo
17 ஆண்டுகளாக தீராத பாகப்பிரிவினை தகராறு: தற்கொலைக்கு முயன்ற பெண் ஆபத்தான நிலையில் அனுமதி

17 ஆண்டுகளாக தீராத பாகப்பிரிவினை தகராறு: தற்கொலைக்கு முயன்ற பெண் ஆபத்தான நிலையில் அனுமதி

26/Jun/2021 08:23:42

ஈரோடு, ஜூன்: ஈரோடு அருகே  குடும்ப சொத்து பாகப்பிரிவினை கடந்த  17 ஆண்டுகளாக தீராததால் ஏற்பட்ட மனை உளைச்சல்  காரணமாக  தற்கொலை செய்து கொல்ல முயன்ற  பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் சேர்ந்தவர் செங்கோட்டையன் (43).அவரது மனைவி லோகேஸ்வரி (28). இவர்களுக்கு மகள்  விஷ்வாஷினி (5) மகன் திவிஸ் (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

செங்கோட்டையனின் குடும்ப சொத்து  4 1/2 ஏக்கர் கண்ணுடையாம்பாளையம் என்னிடத்தில் உள்ளது.  இதில் செங்கோட்டையனுக்கும் கைலாஷ் என்பவருக்கும் தலா 2. 25  ஏக்கர் என சரிசமமாக உரிமை உள்ளது. ஆனால் கைலாஷ் என்பவர் செங்கோட்டையனுக்கு சேர வேண்டிய சொத்தை  பிரித்துக் கொடுக்காமல் கைலாஷ்சின் மகள் சுபத்ரா மற்றும் மருமகன் சம்பத் என்பவர் செங்கோட்டையன் சொத்துகளையும் சேர்த்து முழுமையாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனக்கு சேரவேண்டிய சொத்துகளை பிரித்துக் கொடுக்கக் கோரி கடந்த 17 ஆண்டுகளாக  அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை மனுக்களை கொடுத்து தீர்வு கிடைக்கவில்லையாம். இதனால்  மன உளைச்சலுக்கு ஆளான   லோகேஸ்வரி தன்னுடைய மரணத்திலாவது இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்று தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

மயக்க நிலையில் கிடந்த லோகேஸ்வரி பார்த்த அவரது மாமியார்  அளித்த தகவலையடுத்து  உடனடியாக செங்கோட்டையன் சம்பவ இடத்திற்கு வந்து லோகேஸ்வரி மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்

லோகேஸ்வரி என் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இசசம்பவம் குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Top