logo
புதுக்கோட்டை மாவட்ட கரும்பு சாகுபடி பரப்பை தஞ்சை அண்ணா கரும்பு சர்க்கரை ஆலையில் சேர்க்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட கரும்பு சாகுபடி பரப்பை தஞ்சை அண்ணா கரும்பு சர்க்கரை ஆலையில் சேர்க்கக் கோரிக்கை

05/Oct/2020 06:06:13

 புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரும்பு சாகுபடி பகுதிகளை தனியார் ஆலைக்கு மாற்றியத்தை ரத்துசெய்து பொதுத்துறையான தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு மாற்ற வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூர் ..டி. பாரி சர்க்கரை ஆலைமட்ட கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ- எஸ்.ராஜசேகரன், செயலாளர் எஸ்.பீமராஜ் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:

 புதுக்கோட்டை மாவட்டம் குரூம்பூரில் இயங்கிவந்த ..டி. பாரி தனியார் சர்க்கரை ஆலை கடந்த சில ஆண்டுகளாக செயல்படவில்லை. தற்பொழுது ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ..டி பாரி ஆலையின் வசமிருந்த 28 பிர்க்காவையும் திருச்சி மாவட்டம் காட்டூரில் உள்ள கோத்தாரி தனியார் ஆலைக்கு மாநில சர்க்கரை துறை ஆணையம் ஒதுக்கியுள்ளது.

 இது புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். ..டி பாரி ஆலை வருவதற்கு முன்பாக இந்தப் பகுதி முழுவதும் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை வசமிருந்தவைகோத்தாரி அலையைவிட அண்ணா சர்க்கரை ஆலை 10 கிலோ மீட்டர் முதல் 60 கிமீ வரை தூரம் குறைவு. கோத்தாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பலகோடி ரூபாய்களை நிர்வாகம் தொடர்ந்து வழங்க மறுத்து வருகிறது. அதே நேரத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 2,500 டன் அரைக்கும் திறன் கொண்டது.

 எனவே, மாநில சர்க்கரை துறை ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 28 பிர்க்கா கரும்புப் பகுதியையும் கடந்த 24.9.2020 அன்று காட்டூர் கோத்தாரி ஆலைக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்தப் பகுதி முழுவதையும் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும். ..டி பாரி ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.49.02 கோடியை உடனடியாக வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்கரும்பு கட்டுப்பாடு உத்தரவு 1966 பிரிவு 5- படி லாப பங்குத் தொகையை கடந்த 2004 முதல் 2008 வரையிலான காத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ..டி பாரி ஆலை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Top