logo
நெல்கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல் விற்பனை செய்யமுடியாமல் தவிக்கும் விவசாயிகள் !

நெல்கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல் விற்பனை செய்யமுடியாமல் தவிக்கும் விவசாயிகள் !

05/Oct/2020 11:20:05

 புதுக்கோட்டை மாவட்டம்  மங்களாக்கோயில் கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த இரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள வெள்ளாளவிடுதி ஊராட்சிக்குட்பட்ட மங்களாக்கோயில் கிராமத்தில் கடந்த மூன்றாண்டுகளாக  இரண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.

இந்தநேரடிநெல்கொள்முதல்நிலையங்களில் வெள்ளாளவிடுதிமங்களாகோயில்இடையன்கொல்லைபட்டி, கண்ணுகுடிபட்டி, ஆத்தங்கரைவிடுதிமஞ்சம்பட்டி,வேலாடிபட்டி,நெற்புகை, சுங்கம்பட்டி,கொல்லம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர்.

மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் ஒரு போகம் மற்றும் இருபோக சாகுபடிகளில் மட்டுமே விவசாயிகள் ஈடுபடும் நிலையில், இந்தப் பகுதி கிராமங்களில் மின்மோட்டார் வசதியுடன் குறுவை, சம்பாகோடை ஆகிய மூன்று போக சாகுபடிகளில் விவசாயிகள் ஈடுபடுவதால் நெல் உற்பத்தியும் கணிசமான  அளவில் இருந்தது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு இக்கிராமத்தில்  இரண்டு நேரடி நெல் கொள்முதல் திறக்கப்பட்டதுஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் பருவகாலத்தில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

 இந்நிலையில், கோடை சாகுபடி முடிந்ததையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இக்கிராமத்தில் செயல்பட்டுவந்த இந்த இரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் அப்பகுதியில் இந்த ஆண்டு அதிக அளவில் செய்யப்பட்டிருந்த குறுவை சாகுபடி முடிவடைந்து நெல் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரையில் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல்முட்டைகளை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அரசு விரைவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்லை டிராக்டர்கள் மூலம்  கொண்டுவந்து அந்த மையங்களில் குவித்து வருகின்றனர்.ஆனால் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையில், அதிகாரிகள் தங்கள் கிராமத்தில் உள்ள இரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை என்றும் இதனால் பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது அவ்வாறு சேதம் அடைந்து விட்டால்  கடன் வாங்கி செலவு செய்த பணத்தை கூட திரும்பச் செலுத்த முடியாத அவல நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

எனவே உணவு அமைச்சர் காமராஜ்  உத்தரவிட்டபடி தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல்   மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி  விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Top