logo
ஈரோட்டில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு அரசின் நிவாரணத்தொகை: அமைச்சர் முத்துசாமி வழங்கல்

ஈரோட்டில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு அரசின் நிவாரணத்தொகை: அமைச்சர் முத்துசாமி வழங்கல்

18/Jun/2021 04:35:53

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் திருக்கோயில்களில் நிலையான ஊதியமின்றி பணி புரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் நிவாரண பொருட்களை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர் களுக்கு கொரோனா நிவாரணத்தொகையாக ரூ. 4000  மற்றும் 15 அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  அதன்படி,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றி வரும் 743 பேருக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு  திண்டல் அருள்மிகு வேலாயுத சுவாமி  திருக்கோயிலில் மாவட்ட  ஆட்சியர்  கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு அர்ச்சகர்கள், பட்டாச்சாரி யார்கள், பூசாரிகள் மற்றும்  இதர  பணியாளர்களுக்கு கொரானா கால நிவாரண உதவித்தொகை ரூ.4000  மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகை மளிகை பொருட்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் இந்து  சமய  அறநிலையத்துறை  இணை  ஆணையர் மங்கையர்கரசி,  உதவி  ஆணையர் அன்னகொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top