25/Jan/2021 05:35:41
புதுக்கோட்டை-ஜன:புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் ஞாயிறு போற்று எனும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்குவது இதன் நோக்கம். அதோடு மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களையும் இந்த நிகழ்வில் கௌரவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முதல் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் எஸ்.சுப்பையா கலந்துகொண்டு என்னைச் செதுக்கிய நூல்கள் என்ற தலைப்பில் பேசுகையில், சுந்தரகாண்டம், சேக்ஸ்பியர் நாடகங்கள் என்னை எம்ஏ இலக்கியம படிக்க தூண்டியது என்றும், Less aim is crime என்று சொன்ன It takes minute to change your life என்ற நூல், கவலையை விட்டொழியுங்கள் என்ற டேல் கார்னகியின் நூல், ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு போன்ற நூல் தன்னை செதுக்கி நூல்கள் என்று குறிப்பிட்டார்.
இதில், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கவிஞர் ஜீவி, புதிய நூல்களை எழுதிய எழுத்தாளர்கள், புத்தகங்களை வழங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக வாசகர் பேரவை செயலர் பேராசிரியர் எஸ்.விஸ்வநாதன், நூலகத்தில் கடந்த மாதத்தில் அதிகமான புத்தகங்களை எடுத்துப் படித்த வாசகர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
ஞாயிறு போற்று என்ற நிகழ்விற்கு வித்திட்ட கவிஞர் தங்கம் மூர்த்தி, முதுநிலை நூலகர் சசிகலா , எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.