logo
ஈரோட்டில் காவிரி கரையோரங்களில்  தர்ப்பணம் செய்யவும் கோவில்களில் தரிசனம் மேற்கொள்ளவும் தடை

ஈரோட்டில் காவிரி கரையோரங்களில் தர்ப்பணம் செய்யவும் கோவில்களில் தரிசனம் மேற்கொள்ளவும் தடை

09/Aug/2021 12:18:43

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் கொரோனோ பரவல் காரணமாக காவிரி கரையோரங்களில்  தர்ப்பணம் செய்யவும் கோவில்களில் தரிசனம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் கால்வாய் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக ஆடி மாதம் என்பதால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள  கோவில்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்காகவும் காவிரி ஆற்றங்கறை ஓரங்களில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும்   வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கோவில்களில் கொரோனோ பரவல் காரணமாக  பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை வித்தித்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக ஆடி அமாவாசை என்பதால், ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை ,கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களை அனுமதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் கொடுக்கு வரும் காவிரி ஆற்றங்கறை ஓரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.மேலும் ஒரு சிலர் தங்களின் முன்னோர்களுக்கு காலிங்கராயன் கால்வாய் பகுதிகளில் முறைப்படி  தர்ப்பணம் கொடுத்தும் அவற்றை கால்வாயில் விட்டும்  வழிபட்டனர்..

Top