logo
புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லூர் கோரையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லூர் கோரையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்

14/Feb/2021 09:02:53

புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லுர் கிராமத்தில் கோரையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (13.02.2021) திறந்து வைத்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

 

பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பு+h; வட்டம், திருநல்லூர் கிராமத்தில் கோரையாற்றின் குறுக்கே ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த புதிய உயர்மட்டப் பாலத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து  காணொளிக்காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைத்தார். உயர்மட்ட பாலத்தால் பயனடையும் பொதுமக்கள் முதல்வருக்கு  நன்றி தெரிவித்தனர்.   

இந்த புதிய உயர்மட்ட பாலம் 240 மீ நீளமும், 9.95 மீ அகலமும் உடையதாகும். இப்புதிய பாலத்தினால் விராலிமலையிலிருந்து இலுப்பூர்; செல்வதற்கு ஏற்கனவே உள்ள மாநில நெடுஞ்சாலை-71-க்கு இணையாக புதிய சாலை இணைப்பு கிடைத்துள்ளது. மேலும் புகழ் பெற்ற திருநல்லூர்  அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலுக்கு  பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் இப்பாலம் அமைந்துள்ளது.

இப்புதிய பாலத்தினால் திருநல்லூர்;, முல்லையூர், குளவாய்ப்பட்டி உள்ளிட்ட இப்பகுதிகளை சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விராலிமலை செல்வதற்கு 10கி.மீ துhரம் குறைந்துள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு எளிதாக செல்வதற்கும், பொது மக்கள் மருத்துவ உதவி பெறுவதற்கும், அவசர ஊர்தி வாகனங்கள் எளிதாக செல்வதற்கும், விவசாய பொருட்களை நகர்புறங்களில் சந்தைப்படுத்துவதற்கும் இப்புதிய பாலம் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

Top