logo
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை

05/Aug/2021 12:08:46

ஈரோடு, ஆக: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 1-ஆம்  தேதி முதல் 7-ஆம் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாள் கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

.ஈரோடு மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் பெரிய கடைகளில் கண்டிப்பாக சோப் தண்ணீர் வைத்து இருக்க வேண்டும் எனவும், சிறிய கடைகளில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கடையில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள், கடையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. கடைக்காரர்கள் கண்டிப்பாக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பின்பற்றவில்லை என்றால் கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வார்கள். அவர் ஆய்வு மேற்கொள்ளும்போது கடையில் வாடிக்கையாளர் முகக்கவசம் அணிய வில்லை என்றால் அவருக்கும், அந்தக் கடை உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தெரிவித்தார். 

மேலும், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் முன்பு எந்த கடையின் உரிமையாளர் ஐ போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான இறைச்சிகளை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் அந்த இறைச்சிகளை வாங்கி உடனடியாக செல்லலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது. 

Top